அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

அத்தியாவசிய தேவைகள் இன்றி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர் மற்றும் சிறுவர்கள் ஆகியோரை அத்தியாவசிய காரணங்கள் இன்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்வையிட ஒருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய கிளினிக் நோயாளர்கள் 067 20 52 068 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, தமது மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.