அஜித்தின் ‘மங்காத்தா’ 2-ம் பாகம்

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம். அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று வெங்கட்பிரபு அறிவித்து உள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது என்றும், மங்காத்தா 2 கதையை அஜித்திடம் தெரிவித்து விட்டேன் என்றும் கூறி உள்ளார்.

 

Comments are closed.