அடுத்த மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி

அடுத்த மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமருடன் நேற்று (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பல கட்டங்களின் கீழ் 135,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.