அணிவகுப்பில் தாக்குதல்; 5 போலீசார் காயம்

மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் போலீசார் அணிவகுப்பு ஒன்றில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், இளைஞர் குழு ஒன்று திடீரென கற்கள் மற்றும் வெடிபொருட்களை தூக்கி வீசினர்.

இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்களுக்கு சம்பவ பகுதியிலேயே வைத்து அதிகாரிகள் சிகிச்சை அளித்தனர்.  அவர்களுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Comments are closed.