அண்ணாத்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்  சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  தீபாவளிக்கு வெளியாக  இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.  இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் டீசர் ஆயுத பூஜையன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்  படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது . அதன்படி அண்ணாத்த திரைப்படத்திற்கு  சென்சாரில் யு /ஏ  சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது .

Comments are closed.