அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரிப்பு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.