அத்தியாவசிய பொருட்கள் 1000 ரூபாவுக்கு குறைவாக

நாட்டில் தற்போது நிலவி வரும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளை குறைக்க அரசாங்கம் முக்கிய முடிவொன்றை தீர்மானித்துள்ளது.

லங்கா சதொச விற்பனை நிலையத்தில், 15 வகையான அத்தியாவசிய பொருட்களை, சந்தை விலையை விடவும் 1000 ரூபா குறைவாக கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

மேலும் 1998 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி, 15 வகையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நுகர்வோருக்கு உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.