அனுஷ்காவிற்கு கோலி உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை மற்றும் தயாரிப்பாளர் அனுஷ்கா ஷர்மா.  “ஏ தில் கே முஷ்கில் ” சுல்தான் ” போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலியை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பின்பு அனுஷ்கா ஷர்மா சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தற்போது ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அனுஷ்காவிற்கு அவரது கணவர் கோலி இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நல்ல வேளையாக நீங்கள் பிறந்தீர்கள். நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்து இருப்பேன் என தெரியவில்லை. நீங்கள் உண்மையில் மிக சிறந்தவர் ” என தெரிவித்து இருந்தார்.

Comments are closed.