அமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டுடன் சென்ற மாணவன்; நால்வர் காயம்

வீட்டில் உருவாக்கிய வெடிகுண்டை மாணவன் ஒருவன் வெடிக்க செய்த நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு மத்திய மிச்சிகனில் நியூவேகோ என்ற பாடசாலை செயல்பட்டு வருகிறது. அங்கு , வீட்டில் உருவாக்கிய வெடிகுண்டை தற்செயலாக மாணவன் ஒருவன் வெடிக்க செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 16 வயது மாணவன் வீட்டில் தயாரித்த வெடிகுண்டை பாடசாலைக்கு கொண்டு சென்று அதனை வெடிக்க வைத்துள்ளதாக மிச்சிகன் பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாணவன் மற்றும் அவனது சக வகுப்பு மாணவர்கள் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவசரகால சேவை அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் வேறு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வகுப்பில் உள்ளனவா? என்பது பற்றியும் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

Comments are closed.