அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால்  ஆயிரத்து 633 உயிரிழப்புகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்காவில் 2 கோடி 13 இலட்சத்து 19 ஆயிரத்து 875 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 3 இலட்சத்து 61 ஆயிரத்து 771 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் கலிபோர்னியா, Texas, ப்லோரிடா மற்றும் நிவ்யோர்க் ஆகிய மாநிலங்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.