அமெரிக்காவில் 30 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்

அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார்.  அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.

கடந்த 1992ம் ஆண்டில் பகதூர் பிரசாத் என்ற இந்தியர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது.  அதற்கு பின்னர் இந்தியர் யாரும் இதனை முறியடிக்கவில்லை.  இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு சேபிள் இந்த சாதனையை முறியடித்து வரலாறு படைத்து இருக்கிறார்.

எனினும், இந்த ஓட்ட போட்டியில் சேபில் 12வது இடம் மட்டுமே பிடித்து உள்ளார்.  அடுத்து வர இருக்கிற சர்வதேச போட்டிகளுக்காக அமெரிக்காவிலேயே பயிற்சி பெற்று வருகிறார்.

இதற்கு முன் கேரளாவின் கோழிக்கோடு நகரில் நடந்த மூத்த தடகள பெடரேசன் கோப்பை சாம்பியன்ஷிப்புக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியில் அவர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை கடந்துள்ளார்.

Comments are closed.