அமைச்சரவையில் மாற்றம்: சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா வன்னியாரச்சி, போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராகவும், டளஸ் அலகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 அமைச்சர்களும் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Comments are closed.