அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக அரசாங்க தரப்பினர் அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் ஏற்கனவே பயிற்சியினை நிறைவு செய்துள்ளதால், அவர்களுக்கான நியமனங்கள் காலம் தாழ்த்தப்படாது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Comments are closed.