அரசுப் பள்ளிகளைக் காப்போம் இயக்கம் சிதம்பரத்தில் தொடக்கம்

சிதம்பரம் ஶ்ரீ பாலா வித்யா பீட வளாகத்தில் அரசுப் பள்ளிகளைக் காப்போம் என்ற இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செல்வரத்தின தீட்சிதர், கிருஷ்ணசாமி தீட்சிதர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய உணவு கழக இயக்குநர் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

அரசுப் பள்ளிகளைக் காப்போம் தன்னார்வ நிறுவனத்தை புவனகிரி இரா.செயபாலன் அவர்கள் மற்றும் ஆசிரியர் அருணாசலம் மற்றும் சிதம்பரம் சித்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிதம்பரம் ஶ்ரீலஶ்ரீ மௌன குரு சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கமல் ஜெயின், எம்.தீபக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Comments are closed.