அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் பிரதேசங்களில், இதுவரை தடுப்பூசி ஏற்றாத அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடுத்தவாரம் தடுப்பூசி செலுத்தப்படுமென, பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டபோதிலும் மக்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.