அரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 38-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.

முதல் பாதியில் 3 புள்ளி பின்தங்கி இருந்த அரியானா அணியினர் பிற்பாதியில் எதிரணியை இரண்டு முறை ஆல்-அவுட் செய்ததுடன் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பினர்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 31-26 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் உ.பி. யோத்தா-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), யு மும்பா-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ் – பாட்னா பைரட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

 

Comments are closed.