அறுவடை குறைவடைய வாய்ப்பு

சிறுபோகத்தில், 50 சதவீதமளவில், அறுவடை குறைவடையக்கூடும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

450,000 ஹெக்டேயர் அளவிலான நிலத்தில் நெற்செய்கை முன்னெடுக்கப்படும்.

சிறுபோக செய்கை குறைவடைந்துள்ள சூழ்நிலையில், 325 ஹெக்டேயர் பரப்பிலான விவசாய நிலத்தில் மாத்திரம் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரம் கிடைப்பது தொடர்பில், விவசாயிகள் மத்தியில் உள்ள நிச்சயமற்ற தன்மையே பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாகும்.

இதன் காரணமாக, சிறுபோகத்தில் 50 சதவீதம் அளவில் அறுவடையில் வீழ்ச்சி ஏற்படும்.

முன்னர் தாங்கள் எதிர்வுகூறியது போன்று, எதிர்வரும் ஒக்டோபர் மாதமாகும்போது, எமது உற்பத்தியில், அவசியமான அரிசியை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தேவையான எஞ்சிய அரிசி தொகையை, உலக சந்தையிலிருந்து இறக்குமதி செய்து, மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை இருக்க வேண்டும்.

பாரிய அந்நிய செலாவணி பிரச்சினை உள்ள நிலையில்தான், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு அரிசியை விநியோக்கும் பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

அரிசி தட்டுப்பாடுக்கு நிச்சயமாக முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.

இதுபோன்ற நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின், அடுத்த பெரும்போகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான திட்டத்தை, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தலையீட்டுடன் தற்போதே தயாரிக்க வேண்டும்.

அப்போதுதான், இந்த இரண்டு போகங்களிலும் ஏற்பட்ட இழப்பை, அடுத்த பெரும்போகத்தில் ஓரளவுக்கேனும் ஈடுசெய்ய முடியும்.

8 இலட்சம் முதல் 8 இலட்சத்து 50 ஹெக்டேர் பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படும்.

இதற்கு அவசியமான விதைநெல்லை உற்பத்தி செய்ய அரசாங்கம், கமநல சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சிறுபோகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அரசாங்கத்தின் தலையீட்டுடன் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்பனவற்றை போதிய அளவு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் இந்த நிலைமையிலிருந்து மீள முடியும்.

அதேநேரம், நுகர்வோரும், தற்போதுவரையில் பயிரிடப்படாத நிலங்களில் ஏதேனும் ஒரு பயிர்ச்செய்கையில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

Comments are closed.