அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை( மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.