அவநம்பிக்கை பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர்

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, அவநம்பிக்கை பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவநம்பிக்கை பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சகல தரப்பினரும் கலந்துரையாடி இணங்கியுள்ளனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Comments are closed.