ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கொரோனா

பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பாடசாலை மாணவி உள்ளிட்ட இரு பெண்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை தொற்றுக்குள்ளான ஆசிரியர் பணியாற்றிவரும் பாடசாலையின்
தரம் 6 – 11 வரையிலான வகுப்புக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான குறித்தப் பாடசாலையின் மாணவியோடு தொடர்பிலிருந்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலும் பொகவந்தலாவை பொதுசுகாதாரப் பிரிவில் 105 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.