ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்ப விசேட வர்த்தமானி!

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக, ஆட்சேர்ப்புக்கான நடைமுறை குறித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக நேற்று தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை தொடர்ந்து புதிய நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும்,மேல் மாகாணத்தில் அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.