ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்!

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினையை, உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அதிபர்- ஆசிரியர் முன்னெடுத்துள்ள இணையவழிக் கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 29ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை, தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Comments are closed.