ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு, நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் வேதன முரண்பாட்டை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக, குறித்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஆசிரியர், அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள, இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Comments are closed.