ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் இடம்பெறவுள்ள இறுதி பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த பரீட்சையை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரீட்சை நடத்தப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Comments are closed.