ஆசிரியை ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கஹதுடுவ பிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஆசிரியை ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் அடங்குவதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொல்கஸ்ஓவிட, வேதர பிரதேசத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு கடந்த 25 ம் திகதி கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த ஆசியரியையின் தாய், தந்தை, கணவன், சகோதரி, சகோதரர்கள் இருவர் மற்றும் 5 வயது பெண் குழந்தைக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்களுக்கு மேலதிகமாக கஹதுடுவ நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments are closed.