ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் உப்போடை வாவி பகுதியில் உருக்குலைந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினால் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்படுகின்றது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.