ஆபத்தான பாதையில் செல்லும் இலங்கை மாணவர்களின் வாழ்க்கை!

அண்மையில் 6 பேர் கொண்ட பாடசாலை மாணவர்கள் குழு பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த வீடியோக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்தில் பள்ளி மாணவர்கள் குழு சண்டை பிடிக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இம்முறை க.பொ.த சாதாரண தர தேர்வு எழுதிய மாணவர்கள் குழுவுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது,

கொரோனா நிலை காரணமாக, குழந்தைகள் நீண்ட நேரம் வீட்டில் தங்குகின்றனர்.

இதனால் தொழில்நுட்ப உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவே அவர்களின் இந்த நிலைக்கு காரணமாகின்றது.

என்று குழந்தை மருத்துவம் மற்றும் இளம்பருவ உளவியலில் நிபுணரான களனி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.

இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.