ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை – செயலகத்துக்குள் நுழைந்தனர்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்ஸ்பரி ஹோட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வந்துள்ளனர், காவல்துறையினரால் இடப்பட்டிருந்த சாலைத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

காவல்துறை குழுக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுவதுடன், அதனை மீளவும் போராட்டக்காரர்கள் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நோக்கி வீசிவருகின்றனர்.

Comments are closed.