ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

ஆஸ்திரேலியாவில்  92 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

குறிப்பாக கான்பெர்ரா நகரில் கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை 75 சதவீத இருக்கையுடன் அனுமதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் குழு விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் கான்பெர்ராவில் உள்ள மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.