இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 212 பேர் எங்கே

இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தீரமாக ஈடுபட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்தில் இருந்து பெங்களூருக்கு திரும்பிய 1,536 பேரில் மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.