இங்கிலாந்து அணிக்கு அபராதம்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் (டிசம்பர் 8 -ம் தேதி ) தொடங்கியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில்  பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால்   இங்கிலாந்து அணிக்கு   (ஐ .சி . சி)  அபராதம் விதித்துள்ளது .அதாவது  போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்தும் , மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது

Comments are closed.