இடிந்து விழுந்தது இரணைமடு திட்ட வாய்க்கால்

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் வாய்க்கால் கட்டுமான பணிகள் சில இடங்களில் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு, இபாட் திட்டத்தின் கீழ் வாய்க்கால் கட்டுமான பணிகள் புனரமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து ஊரியான் பண்ணங்கண்டி ஆகிய பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகம் செய்யும் வாய்க்காலின் கட்டுமானமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments are closed.