இதுவரை 18 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம்!

கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 23 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை அம்பாறை மாவட்டத்தில் 751 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 257 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வட மாகாணத்திற்கு உட்பட்ட யாழ் மாவட்டத்தில் 06 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேரும், நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை யாழ் மாவட்டத்தில் 218 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 39 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் 484 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 121 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 90 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளிய பகுதியில் 38 பேரும், பாதுக்க பகுதியில் 11 பேரும் அதிகபட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 110 பேருக்கு, நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கம்பஹா மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, ஒன்பதாயிரத்து 830 ஆக உயர்வடைந்துள்ளது

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 30 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 25 பேரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 18 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாக, கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக, நாட்டில் நேற்றைய தினம் 10 ஆயிரத்து 774 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.