இந்தியாவில் கொரோனா பாதிப்பு ‘கிடுகிடு’ உயர்வு

ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ‘கிடுகிடு’வென உயரத்தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் நேற்று 22,775 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்ட நிலையில் இன்று 27,553 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,48,61,579 லிருந்து 3,48,89, 132 ஆக உயர்ந்துள்ளது.ல் ஒரே நாளில் 9,249 பேர் கொரோனாவால் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,75,312 லிருந்து 3,42,84,561 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தோர் எண்ணிக்கை 4,81,486 லிருந்து 4,81,770 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்னிக்கை 1,22,801 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,525 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 560 பேர் குணமடைந்த நிலையில் 965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக பதிவான மாநிலங்களில்,  மராட்டியம் – 460, டெல்லி -351, குஜராத் – 136, கேரளா -109 ராஜஸ்தான் -69,  தெலுங்கானா – 67, கர்நாடகா -64, அரியானா -63, பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Comments are closed.