இந்தியாவில் மேலும் 18,833- பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 203 நாட்களில் இல்லாத வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பதிப்பில் இருந்து 24,770- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 687- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று மீட்பு விகிதம் 97.94 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.34 சதவிகிதமகாக உள்ளது.

கடந்த 37 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 57.68- மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.