இந்தியா புதிய சாதனை

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்தது. இதல் மூலம் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்ததுடன் கடைசியில் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீசை மிரட்டியது. இவர்களின் அதிரடியால், டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவர்களில் இந்தியா 86 ரன்கள் குவித்தது. இது இந்திய அணி டி20 போட்டியின் கடைசி 5 ஓவர்களில் எடுத்த அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்தது.

இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை தற்போதைய இந்திய அணி முறியடித்துள்ளது.

Comments are closed.