இந்திய- இலங்கை இருதரப்புபும் இன்று கலந்துரையாடல்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஜனாபதிபதி கோட்டாய ராஜபக்ஷவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும்நோக்கில் இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று மாலை நாட்டை வந்தடைந்த இந்திய வெளியுறவு அமைச்சருடன் மேலும் இரு உயர்மட்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Comments are closed.