இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும், கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

காரைநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கமும் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

காரைநகர் பிரதேச சபைக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள், பின்னர் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர்.

பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் அங்கு ஜனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கான கோரரிக்கை மனுவை கையளித்தனர்.

Comments are closed.