இந்திய மீனவர்கள் 21 பேருக்கு ஒத்திவைப்பு சிறை

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, அவர்கள் மிரிஹான தடுப்பு முகாம் ஊடாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் 21 பேரும், கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

Comments are closed.