இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைத்தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்  சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை – இந்திய மீனவர்களில் பிரச்சிகைகள் தொடர்பில் ஆராயும் வகையில் கடற்றொழில் அமைச்சரை சந்தித்துள்ளார்.

இதன்படி,  இந்தக் கலந்துரையாடலில் கடந்த காலங்களில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற் தொழிலாளர்களையும்  இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கடற் தொழிலாளர்களையும் விடுதலை செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பற்காக நடவடிக்கை குறித்து  ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  இலங்கையில் மீன்பிடி தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளவற்றை விற்பனை செய்து தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரபிக் கடலுக்கு செல்லும் இலங்கை கடற் தொழிலாளர்களுக்கான மாற்று வழியாக இந்தியக் கடற் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கடற் தொழில் அமைச்சரினால் முன்வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்வதாகவும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர்  இதன்போது தெரிவித்துள்ளார்

இதேவேளை  இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர்   சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழ்த்தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில்  இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Comments are closed.