இந்தி நடிகரை பாராட்டிய மாதவன்

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோசன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை ஹிருத்திக் ரோசனும் மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின்  முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தற்போது  அபுதாபியில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக  நடிக்கும் சயீப் சலிகான் குறித்து நடிகர் மாதவன், சயீப் அலிகான் ஒரு வேடத்தில் தனது மூ இதயத்தையும் மனதையும் செலுத்தினால் அவர் ஒரு நடிப்பு அசுரனாக ஜ ஜொலிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.