இந்தோனேஷியாவில் விநோத திருமணம் செய்த வாலிபர்

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்தவர் Khoirul Anam, கடந்த வாரத்தில் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டார்.

அதற்காக ரைஸ் குக்கரை அழகாக வடிவதை்து, அன்பு முத்தத்துடன் அதனை திருமணம் செய்து கொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில், நான்கு நாட்கள் கழித்து விவாகரத்து செய்து விட்டாராம். இதற்கு காரணம் தன்னுடைய மனைவி அரிசி சாதத்தை நன்றாக சமைப்பதாகவும், மற்றவைகள் மிக சுமாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வைரலாக இதை செய்துள்ளார் என்றும், இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வு முடிந்தது வருத்தமே எனவும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து  வருகின்றனர்.

 

Comments are closed.