இன்றும் சிஐடியில் முன்னிலையாகிறார் அருட்தந்தை சிறில் காமினி

அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.

அதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி நேற்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

சுமார் 8 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர், அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், அவர் இன்று (16) முற்பகல் 9.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

Comments are closed.