இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களுக்கு அதிக மின்வெட்டு

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.