இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல்கள் மூலம் 7,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதன் முதலாவது கப்பல் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதென லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.