இன்று சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. சமுதாயம் மற்றும் நமது சமுதாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச புரிதலை வளர்ப்பதற்கும், தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் மொழி நிபுணர்களின் பணியை கவுரவிக்க சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம்  ஒரு வாய்ப்பு என்று ஐ.நா கூறுகிறது.

வரலாறு மற்றும் அடையாளம்:

1953 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு  இந்த நாளை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மே 2017 -இல் தீர்மானங்கள் 71/288 ஐ நாடுகளை இணைப்பதில் மொழி வல்லுனர்களின் முக்கியத்துவம் ,அமைதி, புரிதல் மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக செப்டம்பர் 30-ந் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினமாக அறிவித்தது.

உலகம் உலகமயமாக்கலை நோக்கி நகரும்போது மொழிப்பெயர்ப்பாளர்களின் பங்கு வியத்தகு அளவில் இருக்கும். மொழி வல்லுநர்கள் நேர்மையான பொது சொற்பொழிவு மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கு உதவுகிறார்கள்.

இலக்கிய, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் மொழிபெயர்க்க மொழிப்பெயர்ப்பாளர்கள் உதவுகிறார்கள், இது ஒரு சிறந்த வகையில் உலகின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் நாகரிகங்களைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கான பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கிறார்கள். இவை அனைத்தும் நாடு முழுவதும் தகவல்தொடர்புக்கு உத்தரவாதம் அளிக்க தேவையானவை.

வருங்காலங்களில் உலகளாவிய தொடர்பு அதிகமாக இருக்கும்போது மொழிப்பெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

Comments are closed.