இன்று தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று (04) காலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டம்,
01. இன்று அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

பொலிஸ் பிரிவு • மோதர (முகத்துவார) பொலிஸ் பிரிவு

கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வாழைத் தோட்டப் பொலிஸ் பிரிவில் அலுத்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அலுத்கட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மிரிஹானை பொலிஸ் பிரிவில் தெமலவத்த (பிடகோட்டே)

கம்பஹா மாவட்டம் இன்று அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

பெலியகொட பொலிஸ் பிரிவு

• பெலியகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹன விகார மாவத்த

• பெலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹவத்த மற்றும் புரணகொடுவத்த (Pooranakotu Waththa)

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு

• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்த

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

Comments are closed.