இன்று மின் தடை இல்லை

இன்றைய தினம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான அவசியம் இல்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மதிய வேளையில், 2 ஆயிரத்து 160 மெகாவோட் மின்சாரமும், இரவு வேளையில் 2 ஆயிரத்து 640 மெகாவோட் மின்சாரமும் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2,900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற காரணத்தினால் இன்றைய தினம் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாலை 6 மணி முதல் இரவு 10மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வருவதனால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவது குறித்து விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இன்று கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.