இன்று முதல் ஞாயிறு வரை மின் தடை அமுலாகும் காலம்
இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் மின்தடை அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை முற்பகல் 9.30 முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின் துண்டிக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்தடையை அமுலாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.