இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆகிய தரப்பினர் உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பான யோசனையை அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தன.

அத்துடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பிலும் இன்று ஆராயப்படவுள்ளது.

Comments are closed.